குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, ஏப்:
மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 33). இவர் மீது மானூர், கங்கைகொண்டான், தாழையூத்து ஆகிய போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
எனவே இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால், வடிவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் விஷ்ணுவிற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து வடிவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்பேரில் வடிவேலை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story