பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 29 April 2021 1:54 AM IST (Updated: 29 April 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

தென்காசி, ஏப்:
தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை ராஜீவ் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 36). பனை ஏறும் தொழிலாளியான இவர் கடந்த 25-ந் தேதி பனைமரத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. 
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நெல்லையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story