ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை
ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரெயில்வே நிர்வாகத்துடன் இணைந்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஈரோட்டுக்கு ரெயில்கள் மூலம் வரும் பயணிகள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். ஈரோடு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார பணியாளர், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணியாளர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலத்துறை பணியாளர் என 3 பேர் ஒவ்வொரு பயணியின் உடல் வெப்பத்தையும் பரிசோதனை செய்கிறார்கள்.
இதுபற்றி ரெயில்வே சுகாதார ஆய்வாளர் சூரியபிரகாஷ் கூறும்போது, ‘இதுவரை ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் சரியான உடல் வெப்ப அளவில் உள்ளனர். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் உடனடியாக ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன’ என்றார்.
Related Tags :
Next Story