மாவட்ட செய்திகள்

இளம்பெண் ஓட்டி பழகும்போது விபரீதம் பின்னோக்கி வந்த கார் மோதி சிறுவன் பலி; காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் + "||" + The boy was killed when his car collided head-on with a car while he was driving; Civilians smashing car

இளம்பெண் ஓட்டி பழகும்போது விபரீதம் பின்னோக்கி வந்த கார் மோதி சிறுவன் பலி; காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

இளம்பெண் ஓட்டி பழகும்போது விபரீதம் பின்னோக்கி வந்த கார் மோதி சிறுவன் பலி; காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
இளம்ெபண் காரை ஒட்டி பழகியபோது பின்னோக்கி வேகமாக வந்த கார் மோதி அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காரை அடித்து நொறுக்கினர்.

கார் மோதி பலி

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மதனந்தபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிரோஷா (வயது 34). இவருடைய மகன் விஜய் (11). இவன், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவர் தனது உறவினரான மோனிகா (26) என்ற பெண்ணுக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.

அப்போது மோனிகா, காரை வேகமாக பின்னோக்கி இயக்கும்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் விஜய் மீது கார் ஏறி இறங்கியது. கார் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காரை அடித்து நொறுக்கினர்

இது குறித்து தகவல் அறிந்துவந்த மாங்காடு போலீசார், பலியான சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான அஜய் மற்றும் மோனிகா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினார்கள். மோனிகாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்த அவர், காரை ஓட்டி பழகும்போதுதான் எதிர்பாராதவிதமாக பின்னோக்கி இயக்கியதில் கார் மோதி சிறுவன் பலியானது தெரிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. சரக்கு வேன்-லாரி மோதல்; சிறுவன் பலி
மணமேல்குடி அருகே சரக்கு வேன் மீது லாரி மோதியதில் சிறுவன் பலியானான்.
2. கதிர் அறுக்கும் எந்திரம் மோதி தந்தை கண்முன்னே சிறுவன் பலி
கதிர் அறுக்கும் எந்திரம் மோதி தந்தை கண்முன்னே சிறுவன் பலி
3. 7-வது நாளாக விற்பனை: கொளுத்தும் வெயிலிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7-வது நாளாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. மருந்துக்காக கொளுத்தும் வெயிலிலும், இரவில் சாலையோரத்திலும் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
4. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை எதிரொலி; வெள்ளிக்கிழமையான நேற்றே காசிமேடு மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். முககவசம் அணியாதவர்களிடம் போலீசார் ரூ.200 அபராதம் வசூலித்தனர்.
5. மாட்டு வண்டியில் சென்றபோது தொண்டையில் தார்குச்சி குத்தி சிறுவன் உயிரிழந்தான்.
மாட்டுவண்டியில் சென்றபோது தொண்டையில் தார்குச்சி குத்தி சிறுவன் பலி