15 பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன
பெருந்துயைில் 15 பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க, மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில், குறிப்பாக 3 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள வணிக வளாகங்களை மூட வேண்டும் என்று, தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, பெருந்துறை பழைய பஸ் நிலைய ரோட்டில் இயங்கிவந்த ஒரு பல்பொருள் அங்காடி, ஈரோடு ரோட்டில் இயங்கிவந்த துணிக்கடைகள், 3 இரு சக்கர வாகன ஷோரூம்கள், குன்னத்தூர் ரோட்டில் இயங்கிவந்த 2 பர்னீச்சர் கடைகள், ஈரோடு ரோடு மற்றும் பங்களா வீதியில் இயங்கி வந்த பர்னீச்சர் கடைகள் என, மொத்தம் 15 வணிக வளாகங்களை மூட பெருந்துறை தாசில்தார் கார்த்திக் நேற்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் சம்பந்தப்பட்ட வணிக வளாகங்கள் மூடப்படுவதை, நேரடியாக கண்காணித்து உறுதி செய்தார்.
Related Tags :
Next Story