மாவட்ட செய்திகள்

கல்பாக்கம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி + "||" + Another killed in bus collision near Kalpakkam

கல்பாக்கம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

கல்பாக்கம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி
கல்பாக்கம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.

5 பேர் உயிரிழந்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த 40 பேர் ஒரு தனியார் பஸ் மூலம் கல்பாக்கத்தில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற பஸ் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராம வளைவில் வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் தனியார் பஸ்சின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் சாவு

20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏழுமலை (74) சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. பிரசவத்துக்கு சென்ற போது துயரம் மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலி
பிரசவத்துக்கு சென்ற போது, மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலியாகினர்.
2. துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
3. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
4. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சி சென்ற போது பஸ் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
5. நுங்கு வெட்டியபோது பரிதாபம் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி பேராசிரியர் பலி
பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியபோது, கீழே தவறி விழுந்த கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.