திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி கொத்தனார் சாவு
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
குளத்தில் மூழ்கினார்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 36). கொத்தனார். நேற்று முன்தினம் கணேசன் தனது நண்பர்களுடன் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றார். குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கினார்.இதைகண்ட அவருடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக அவர்கள் அந்த பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல் மீட்புதீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மூழ்கி போன கணேசன் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.இரவு நேரம் என்பதால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை கணேசன் உடல் கரை ஒதுங்கியது. இதுதொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.