அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு


அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு
x
தினத்தந்தி 29 April 2021 6:02 PM IST (Updated: 29 April 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி:

எப்போதும் வென்றான்-சிவஞானபுரம் விலக்கு அருகே சிறிய பாலத்துக்கு கீழ் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் கோடு போட்ட சிமெண்ட் நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story