நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரிசோதனை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை விட, பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
கடந்த 27-ந் தேதி 72 பேர், நேற்று முன்தினம் 67 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 480 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 430 ஆக குறைந்து இருக்கிறது. இது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளதை காட்டுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது.
அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பிற மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது தினமும் 1,200-ல் இருந்து 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகரிக்க நடவடிக்கை
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து ஓரிரு நாளில் முடிவுகள் கிடைத்துவிடும். வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
இதில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் 50 சதவீதம் பேருக்கும், மற்றவர்கள் 50 சதவீதம் பேருக்கும் என 1,300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரிக்கு 96 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் வரவழைக்கப்பட உள்ளது. விரைவில் வந்தவுடன் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story