தேனி மாவட்டத்தில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை கலெக்டர் அதிரடி உத்தரவு
தேனி மாவட்டத்தில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தமபாளையம்:
கொேரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து உத்தமபாளையம் பேரூராட்சி மற்றும் கோகிலாபுரம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நேற்று முல்லைப்பெரியாற்றுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு மறு உத்தரவு வரும்வரை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைகுமார் கூறுைகயில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் அதிக அளவில் கும்பலாக ஆறுகளுக்கு சென்று குளித்து வருகின்றனர். கொரோனா பரவலையொட்டி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றுக்கு செல்ல அனுமதிக்க கூடாது. தடையை மீறி ஆற்றில் குளித்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story