தொழிலாளி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி ஒரே நாளில் 281 பேருக்கு தொற்று


தொழிலாளி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி ஒரே நாளில் 281 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 29 April 2021 8:54 PM IST (Updated: 29 April 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். ஒரே நாளில் 281 பேருக்கு தொற்று ஏற்பட்டது.


தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 905 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 195 பேர் நேற்று மீண்டனர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 197 பேர் குணமாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,496 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே உத்தமபாளையத்தை சேர்ந்த 30 வயது தொழிலாளி சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புடன் போடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உசிலம்பட்டியை சேர்ந்த 50 வயது நபர் புற்றுநோய் பாதிப்புக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. பின்னர் அவர் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



Next Story