பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 29 April 2021 9:21 PM IST (Updated: 29 April 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 12 லட்சம் மோசடி

கோவை

வீடு கட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இது  குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

ரூ.12 லட்சம் மோசடி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோளவம்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவருடைய மகள் தன்வி (வயது 32). இவர் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது

எனக்கு சொந்தமாக வீடு கட்டும் ஆசை இருந்தது. இதற்காக கோவையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தை அணுகி போது அவர்கள் எனக்கு வீடு கட்டி தருவதாக கூறினார்கள்.

அதை நம்பி அந்த நிறுவனத்தை சேர்ந்த அபிமன்னன், தமிழரசி, சிந்து, பெரோஸ்கான் ஆகியோரிடம் ரூ.12 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் இதுவரை வீடு கட்டித் தரவில்லை.

இதனால் பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தையும் திரும்ப தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் குறப்பட்டுள்ளது.

4 பேர் மீது வழக்கு

இது குறித்து அபிமன்னன், தமிழரசி, சிந்து, பெரோஸ்கான் ஆகிய 4 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story