தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகளை மயக்கிய விபசார கும்பல் சிக்கியது


தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகளை  மயக்கிய விபசார கும்பல் சிக்கியது
x
தினத்தந்தி 29 April 2021 9:24 PM IST (Updated: 29 April 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகளை மயக்கிய விபசார கும்பல் சிக்கியது

சரவணம்பட்டி

செல்போனில் கவர்ச்சி படங்களை அனுப்பி தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை மயக்கிய விபசார கும்பல் சிக்கியது. இதில் தொடர்பு டைய அழகி மீட்கப்பட்டார். 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

கவர்ச்சி படங்கள்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 32வயது பெண் வசித்து வருகிறார். இவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். 

அந்த படங்களை லைக் செய்யும் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை அந்த பெண் குறித்து வைத்துக்கொள்வார்.
பின்னர் அந்த பெண் தனது செல்போன் எண்ணை பதிவிடுவார். அதை பார்த்து தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்ணை பெற்றுக்கொள்வார். 

பின்னர் அவர்களுடைய வாட்ஸ்-அப்பில்மேலும் சில கவர்ச்சி படங்களை அனுப்புவார். அதை பார்த்து பேச விரும்புபவர்களிடம்,  தான் தனிமையில் இருப்பதாகவும், தனக்கு துணையாக யாரும் இல்லை என்று வசீகர குரலில் பேசி மயக்குவார்.

சபலமடையும் ஆண்கள்

அதில் சபலம் அடையும் ஆண்கள் தொடர்ந்து பேச்சு கொடுத்து வந்தனர். அதில், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை தேர்வு செய்து, வீட்டுக்கு வந்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று அந்த பெண் வலைவீசுவார். அதற்கு மயங்கும் நபர்கள், அந்த இளம்பெண் கூறும் நேரத்தில் வீட்டிற்கு செல்வார்கள். 

அங்கு அவர்கள் உல்லாசம் அனுபவிப்பார்கள். அப்போது 2 வாலிபர்கள் கதவை தட்டுவார்கள். உடனே அந்த பெண் பதற்றத்துடன் வேகமாக வந்து கதவை திறப்பார். 

அப்போது ஒரு வாலிபர், தான் பெண்ணின் கணவர் என்றும் மற்றொருவர் தனது நண்பர் என்றும் கூறுவார். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து, உல்லாசம் அனுபவிக்கவந்த நபரிடம் பணம் மற்றும் பொருட்களை கேட்டு மிரட்டுவார்கள்.

ஆபாச வீடியோ மிரட்டல்

பணம் தரவில்லை என்றால் நீங்கள் உல்லாசம் அனுபவித்த ஆபாச வீடியோ காட்சிகளை உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவோம் என்று கூறி அவர்கள் மிரட்டு வார்கள். 

இதனால் குடும்ப மானம் போய்விடும் என்று பயந்து பெரும் பாலான தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் கேட்ட பணத் தை கொடுத்து விட்டு தப்பித்தோம் என்று கருதி வெளியேறுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு டாக்டர் ஒருவர், அந்த பெண்ணின் அழைப்பின் பேரில் அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். அவர் அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார். 

பணம் பறித்தனர்

அப்போது, வழக்கம்போல அந்த 2 வாலிபர்கள் வந்து கதவை தட்டினர். அந்த இளம்பெண் வந்து கதவை திறந்ததும், அரசு டாக்டரிடம்  நீங்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து உள்ளோம்,


 நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வீடியோவை உங்கள் மனைவிக்கும் சமூக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன அரசு அதிகாரி தன்னிடம் இருந்த ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த அரசு டாக்டரை விடுவித்துள்ளனர். 

ஆனாலும் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த அரசு டாக்டர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். 

2 பேர் கைது

அதன் பேரில் போலீசார் குறிப்பிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண் மற்றும் 2 வாலிபர்கள் இருந்தனர். 

அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அந்த பெண் விபசார அழகி என்பதும், விபசார புரோக்கர்கள் கார்த்திக் (வயது38), ஷ்யாம் (35) என்பதும் தெரிய வந்தது. 

அதைத்தொடர்ந்து அந்த அழகி மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கார்த்திக், ஷ்யாம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட் டனர்.

 இதையடுத்து அந்த கும்பல் இதுவரை எத்தனை பேரிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளது, மேலும் அவர்களுடைய செல்போன் எண்களையும், சமூக வலைத்தள கணக்குகளையும் போலீசார் சோதனை செய்து விசாரித்து வருகின்றனர். 


Next Story