கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடல்


கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடல்
x
தினத்தந்தி 29 April 2021 4:33 PM GMT (Updated: 29 April 2021 4:33 PM GMT)

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது.

கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலையில் கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 28 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணிமேற்பார்வையாளர் மற்றும் 2 கணினி உதவி அலுவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவடிபட்டு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் ஆலோசனைப்படி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் 4 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது. 

Next Story