ஓட்டு எண்ணும் ஊழியர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை


ஓட்டு எண்ணும் ஊழியர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 29 April 2021 10:06 PM IST (Updated: 29 April 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டு எண்ணும் ஊழியர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான ஒட்டுப்பதிவு கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஓட்டு எண் ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வாக்குகள் எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதில், அரசியல் கட்சிகளின் முகவர்களும் கலந்து கொள்கின்றனர். எனவே அவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்று தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனை

இதைத் தொடர்ந்து அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று காலை கொரோனா பரிசோத னை முகாம் நடைபெற்றது. 

அங்கு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் கட்சிகளின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழ மை) தெரிவிக்கப்படும்.

சட்டமன்ற தொகுதிகள்

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் தவிர மற்ற சட்டமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகளை எண்ண தலா 14 மேஜைகள் போடப்பட உள்ளன. ஒரு மேஜைக்கு 2 ஊழியர்கள், ஒரு நுண் பார்வையாளர் என 3 பேர் தேவைப்படுவார்கள். 

அதன்படி 42 பேரும், தபால் வாக்குகள் எண்ண 2 அல்லது 3 மேஜைகள் போடப்பட்டு ஒரு மேஜைக்கு 4 பேர் வீதம் 12 பேர் என ஒரு தொகுதிக்கு சுமார் 70 முதல் 80 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் தவிர அரசியல் கட்சிகளின் முகவர்களும் வாக்கு எண்ணுவதை கண் காணிப்பார்கள். எனவே ஒரு தொகுதிக்கு 100 பேர் இருப்பார்கள்.

கூடுதல் ஊழியர்கள்

அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் தொற்று உறுதியானவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே கூடுதலாக 20 சதவீதம் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள். அவர்களுக் கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதே போல அரசியல் கட்சியினரும் கூடுதல் முகவர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அவர்களையும் கொரோனா பரிசோத னைக்கு உட்படுத்த கூறி உள்ளோம். இதில், யாருக்காவது தொற்று உறுதியானால் மாற்று நபர் முகவராக செயல்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story