கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 27-ந் தேதி கணபதி பூஜை, யமுனா பூஜை, கோ பூஜை, ஹோமங்கள் நடந்தது. நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து மங்கள ஆரத்தி, தீபாராதனை, ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை தேவ பாராயணம், ஹோமங்கள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் விசேஷ பூஜைகளும், மகா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோக நிகழ்ச்சி நடந்தது. சுப்ரவேடி, பாலசுப்பிரமணியம் சாஸ்தி ஆகியோர் மாரியம்மன், காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் திருப்பதி கவுண்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story