பராமரிக்கப்படாத சாலை: பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்
பராமரிக்கப்படாத சாலை பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ் சாலை பணிகள் நடைபெற்று சில பகுதிகள் முடிவுற்றும், சில சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையாக காரைக்குடி-திண்டுக்கல் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநில நெடுஞ்சாலையாக கிராமப்புறங்களிலும் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு பணிகள் 90 சதவீதம் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. குறிப்பாக அரசினம் பட்டியில் இருந்து சூரக்குடி வரையிலும் மருதிப்பட்டியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரையிலும் வேங்கை பட்டியில் இருந்து பிரான்மலை வரையிலும் உள்ள பல சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள், புதிதாக போடப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளன.
இந்தநிலையில் சாலைகளின் இருபுறங்களிலும் முறையாக பராமரிக்காமல் மண், கல் செப்பனிடாமல் விடுபட்டதால் சாலையில் ஓரங்களில் 4 சக்கர வாகனத்தில் ஒரு சக்கரம் இறங்கினாலும் சாலையில் இருந்து வாகனம் கவிழும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலை பள்ளத்தில் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படுகிறது.
நேற்று மருதிபட்டியில் இருந்து முறையூர் வழியாக செல்லும் சாலையில் மருதிபட்டியில் இருந்து சூரக்குடி வழியாக மேலூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சற்று சாலை ஓரம் சென்றபோது பஸ் பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதுபோன்று நடக்காத வகையில் சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story