தாராபுரம் சலூன் கடைக்காரர்கள் நிவாரண உதவிகேட்டு சப்கலெக்டரிடம் மனு
தாராபுரம் சலூன் கடைக்காரர்கள் நிவாரண உதவிகேட்டு சப்கலெக்டரிடம் மனு
தாராபுரம்,
தாராபுரம் சலூன் தொழிலாளர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது சலூன் கடை வைத்திருக்கும் மற்றும் பணிபுரியும் தொழிலார்கள். மீண்டும் அதேபோல் எந்தவித முன் அறிவிப்புமின்றி கடந்த 26-ந்தேதி முதல் அரசு முழு ஊரடங்கு அறிவித்து. அதைத்தொடர்ந்து சலூன் கடைகள் திறக்க கூடாது. அன்றாடும் சலூன் தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே சலூன் தொழிலாளர்களின் அன்றாட உணவு இருப்பிட வாடகை உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதனால் சலூன் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் (காலை 7 மணி முதல் 1 மணி வரை) கடை திறக்க அனுமதிக்க சப்-கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் சலூன் தொழிலாளர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு தொழிலாருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் உதவி தொகை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக சுகாதார துறை அறிவிப்பின்படி அனைத்து சலூன் கடைகளிலும் கிருமிநாசினி,முககவசம் ஒரு நபர் பயன்படுத்தும் துணி போன்ற அனைத்து விதி முறைகளையும் கடந்த முதலாம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி இதில் இருந்தே பின்பற்றி வந்துள்ளோம் தற்போது 2-ம் அலை நோய்த்தொற்றில் பொதுமக்களை காக்க சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றுவதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story