சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்


சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
x
தினத்தந்தி 29 April 2021 11:12 PM IST (Updated: 29 April 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கால்நடைகளை வெளியே விடுவதால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வால்பாறை

வால்பாறையில் கால்நடைகளை வெளியே விடுவதால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

சிறுத்தையை பிடிக்க கூண்டு 

வால்பாறை நகர் பகுதியை ஒட்டி இருக்கும் வாழைத்தோட்டம், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 

இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.  மேலும் பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க வாழைத்தோட்டம் பகுதியில் ஒரு கூண்டு, தேயிலை தோட்ட பகுதியில் மற்றொரு கூண்டு என 2 கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.
  
பிடிக்க முடியாமல் திணறல் 

மேலும் அங்கு வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

மேலும் இங்குள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தெருவில் விட வேண்டாம் என்றும், அவற்றை பட்டியில் அடைத்து வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

ஆனால் யாரும் அதை கேட்பது இல்லை. தெருக்கள், எஸ்டேட் பகுதிகளில் ஆடு மற்றும் மாடுகள் அங்கும் இங்குமாக அலைந்து வருகிறது. 

இதனால் கூண்டு வைத்து இருக்கும் இடத்தில் சிறுத்தை வராமல், கால்நடைகள் மேயும் இடத்துக்கு சென்று அவற்றை தூக்கிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. இதனால் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- 

தெருவில் அலையும் கால்நடைகள் 

சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து இருக்கும் நிலையில் கால்நடைகளை வெளியே அலைய விட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை கேட்பது இல்லை. மாறாக அவர்கள் அடைத்து வைக்காமல் விட்டுவிடுகிறார்கள். 

இதனால் அவை எஸ்டேட் பகுதிகளில் மேய்வதால், அங்கு சுற்றும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் கால்நடைகள் மேயும் இடத்துக்கு சென்று அவற்றை அடித்து சாப்பிடக்கூடிய நிலை உள்ளது. 

எனவே பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை பட்டிகளில் அடைத்து வைத்து ஊருக்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story