பாசம் இருந்தால் இது ஒரு சுமையல்ல


பாசம் இருந்தால் இது ஒரு சுமையல்ல
x
தினத்தந்தி 29 April 2021 11:28 PM IST (Updated: 29 April 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

பாசம் இருந்தால் இது ஒரு சுமையல்ல

துடியலூர்

முழுமை பெற்ற காதல் எல்லாம்... முதுமை வரை கூட வரும் என்பது ஒரு பழைய பாடல். ஆம்..வயதானாலும் இணை பிரியாமல் வாழும் தம்பதிகள் இன்னும் இதயதங்களை அன்பினால் பறிமாறிக்கொண்டு இல்லறவாழ்க்கையின் இலக்கணமாகவே திகழ்கின்றனர். 

அந்த வகையில் ஒரு சம்பவம் நடந்தது. அது பற்றி பார்க்கலாம்.

கோவையில் கொரோனா தொற்று  வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கோவையை அடுத்த துடியலூர் அரசு மருத்துவமனையில கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில்   72 வயது மதிக்கத்தக்க கணவர், தள்ளாடும் வயதில் நடக்க முடியாத தனது  மனைவிக்கு தடுப்பூசி போடுவதற்காக அவரை  தனது காரில் அழைத்து வந்தார். 

அங்கு வந்ததும் காரில் இருந்து தனது மனைவியை ஆஸ்பத்திரிக்குள் தூக்கிக்கொண்டே வந்தார். பின்னர் தடுப்பூசி போட்டதும் அதுபோலவே அவரை தூக்கிக்கொண்டு காருக்குள் சென்று அமர வைத்தார். 

இதுவல்லவா? இதயம் கலந்த பாசம். ஆம்....பாசம் இருந்தால் மனைவியை தூக்குவது என்பது எந்த வயதிலும்  ஒரு சுமை அல்ல என்பதை அந்த முதுவயது கணவர் உணர்த்தியது அனைவரையும் நெகிழ வைத்தது.


Next Story