திருவரங்குளத்தில் பயன்பாட்டில் இல்லாத சமுதாய கிணறு


திருவரங்குளத்தில் பயன்பாட்டில் இல்லாத சமுதாய கிணறு
x
தினத்தந்தி 29 April 2021 11:36 PM IST (Updated: 29 April 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

சமுதாய கிணறு நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது.

திருவரங்குளம்,ஏப்.30-
திருவரங்குளம் தெற்கு ரத வீதி தெட்சிணாமூர்த்தி குளக்கரையில் பழமையான சமுதாய கிணறு உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் தெருவுக்கு தெரு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் இந்த கிணற்றை பயன்படுத்துவதை தவிர்த்தனர். இதனால் இந்த கிணறு தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. கிணற்றை சுற்றி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த கிணறு நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த கிணற்றை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு கிணறாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story