வங்கி உதவி மேலாளரை தாக்கியவர் மீது வழக்கு


வங்கி உதவி மேலாளரை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 April 2021 11:39 PM IST (Updated: 29 April 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

வங்கி உதவி மேலாளரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருபவர் மரியமுத்து அமுதா (வயது31). இவர் பணியில் ஈடுபட்டு இருந்தபோது முன் விரோதம் காரணமாக மதுரை திருப்பரங்குன்றம் நடுத் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சூர்யபிரகாஷ் என்பவர் அலுவலக நேரத்தில் உள்ளே வந்து தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரகாசை தேடிவருகின்றனர்.

Next Story