சாலையில் தடுமாறி விழுந்து பெண் சாவு


சாலையில் தடுமாறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 29 April 2021 11:59 PM IST (Updated: 29 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நடந்து சென்ற பெண் சாலையில் தவறி விழுந்து இறந்தார்.

காரைக்குடி,

காரைக்குடி கழனிவாசல் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாதனா (வயது 29). இவர் முடியரசனார் சாலையில் உள்ள மருத்துவ பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமாகிறது. சம்பவத்தன்று சாதனா தான் கருவுற்று இருப்பதாகவும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து வருகிறேன் என்று செல்போனில் தனது தாயாரிடம் கூறிவிட்டு டி.டி.நகரிலுள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று கொண்டு இருந்தார். டி.டி.நகர் 4-வது வீதி அருகே நடந்து சென்ற போது தடுமாறி சாலையிலேயே விழுந்தார்.உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி பெரியார் சிலை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாதனா இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story