அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தல்


அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 April 2021 12:15 AM IST (Updated: 30 April 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கீழக்கரை, 
 தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழக செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 2-ம் அலை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
இந்தநிலையில் நிபந்தனைக்கு உட்பட்டு பஸ்களில் பயணம் செய்யும் பயனாளிகள் பிற மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. பெரும்பாலான ஊர்களில் அந்தந்த ஊர் மக்களே வழிபாட்டு தலங்களுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசம் அணிந்து வழிபட்டு வருகின்றனர். மேலும் நிபந்தனையுடன் பஸ் நிலையம், டாஸ்மாக், கடை வீதி போன்றவற்றுக்கு அனுமதி அளித்ததை போல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு அரசு அனைத்து மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை காஜி சலாஹுதீன் ஜமாலி கேட்டுக்கொண்டார்.

Next Story