ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
திருவெறும்பூர், ஏப்.30-
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே மொராய்ஸ் சிட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் விக்னேஸ்வரன்(வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 மாதத்துக்கு முன் பிரபாகரன் தனது மகனுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் ‘புளுடூத் ஹெட்போன்’ வாங்கித்தரும்படி தந்தையிடம் விக்னேஸ்வரன் கேட்டுள்ளார். அதற்கு அவர் பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே விக்னேஸ்வரன் கடந்த 28-ந்தேதி ஆன்-லைனில் ரூ.3 ஆயிரத்துக்கு ‘புளுடூத் ஹெட்போன்’ ஆர்டர் செய்துள்ளார். பின்னர் தந்தை திட்டுவாரோ என்ற அச்சத்தில் ஆர்டரை ரத்து செய்துவிட்டாா்.
இந்தநிலையில் மனஉளைச்சலில் இருந்த விக்னேஸ்வரன் நேற்று இரவு வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story