டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்
திருக்கடையூர் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலை மோதியதால் கொரோனா தாற்று பரவும் அபாயம் நிலை நிலவியது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலை மோதியதால் கொரோனா தாற்று பரவும் அபாயம் நிலை நிலவியது.
கூட்டம் அலைமோதல்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் உள்ளது.தற்போது டாஸ்மாக் பார்கள், சினிமா தியேட்டர்கள், கோவில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருக்கடையூர் அருகே உள்ள அண்டை மாநிலமான புதுச்சேரி - காரைக்காலில் வருகிற 30-ந் தேதி வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் தொடர்ந்து 2 நாட்களாக திருக்கடையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனா். இதனால் திருக்கடையூர் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதியது.
கொரோனா தொற்று பரவும் அபாயம்
மேலும் டாஸ்மாக் கடைகளில் தாங்கள் விரும்பி கட்ட மதுபானம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். சில மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர். இதனால் நேற்று வழக்கத்தைவிட அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு வழிமுைறகளை பின்பற்றாமல் மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக நின்று மது வாங்கினர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை நிலவியது.
Related Tags :
Next Story