பொன்னமராவதி பகுதியில் நுங்கு விற்பனை தீவிரம்


பொன்னமராவதி பகுதியில் நுங்கு விற்பனை தீவிரம்
x
தினத்தந்தி 29 April 2021 7:04 PM GMT (Updated: 29 April 2021 7:04 PM GMT)

பொன்னமராவதி பகுதியில் நுங்கு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொன்னமராவதி, ஏப்.30-
பொன்னமராவதி அருகே ஏனாதி, பிடாரம்பட்டி, அம்மன்குறிச்சி, ஆலவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது, இந்த மரங்களில் நுங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யும் நுங்குகளை பொன்னமராவதி, வலையப்பட்டி, பிடாரம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்குகளை வாங்கிச்செல்கின்றனர்.

Next Story