வாழை தோட்டத்தில் கடமான்கள் அட்டகாசம்
களக்காடு அருகே வாழை தோட்டத்தில் கடமான்கள் புகுந்து அட்டகாசம் செய்தது.
களக்காடு, ஏப்:
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் சில்கிஸ் சாமுவேல் (வயது 47). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. அதில் அவர் வாழை பயிரிட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கடமான்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் கடமான்கள் அவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்து, வாழைத்தார்களை தின்று நாசம் செய்கின்றன. எனவே கடமான்கள் நாசம் செய்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கடமான்கள் மற்றும் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story