உரிய விலை கிடைக்காததால் பறிக்காமல் செடியில் வீணாகும் காய்கறி


உரிய விலை கிடைக்காததால் பறிக்காமல் செடியில் வீணாகும் காய்கறி
x
தினத்தந்தி 30 April 2021 1:34 AM IST (Updated: 30 April 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் உரிய விலை கிடைக்காததால் பறிக்காமல் செடியில் காய்கறிகள் வீணாகி வருகிறது.

தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதியில் உரிய விலை கிடைக்காததால் பறிக்காமல் செடியில் காய்கறிகள் வீணாகி வருகிறது. 
வெண்டைக்காய் 
வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல்குளம், சுப்பிரமணியபுரம், சால்வார்பட்டி, இரவார்பட்டி, வெற்றிலையூரணி, பூசாரி நாயக்கன்பட்டி, தாயில்பட்டி, எட்டக்காபட்டி, செவல்பட்டி, அலமேலுமங்கைபுரம், கொட்டமடக்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
தற்போது இந்த காய்கறிகள் அறுவடைக்கு தயாராகி விட்டன. ஆனால் இந்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை பறிக்காமல் அப்படியே போட்டு விட்டனர். 
உரிய விலை 
இதுகுறித்து எட்டக்காபட்டி விவசாயி திருமால் கூறியதாவது:- 
வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம். இந்தநிலையில் நாங்கள் சாகுபடி செய்த காய்கறிக்கு உரிய விலை தற்போது இல்லை. 
தக்காளி தற்போது கிலோ ரூ.3 முதல் ரூ.15 வரையிலும், வெண்டைக்காய் கிலோ ரூ.8 முதல் ரூ.20 வரையிலும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
அறுவடை கூலி 
தற்போது உரத்தின் விலை நன்றாக அதிகரித்து உள்ளது. நாங்கள் கடன் வாங்கி தான் சாகுபடி செய்து வருகிறோம். மேலும் சாகுபடி, பராமரிப்பு, அறுவடை என எண்ணற்ற செலவு உள்ளது. இந்தநிலையில் அறுவடை கூலி கூட மிஞ்சாததால் கத்தரிக்காய் மற்றும் வெண்டைகாய்களை பறிக்காமல் செடிகளில் வீணாகிறது.  எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் ெகாண்டு உரங்களின் விலைைய கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story