திண்டுக்கல்லில் குளத்தில் மூழ்கி நெசவு தொழிலாளி பலி


திண்டுக்கல்லில் குளத்தில் மூழ்கி நெசவு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 30 April 2021 1:45 AM IST (Updated: 30 April 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் குளத்தில் மூழ்கி நெசவு தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல்-நத்தம் சாலையில், அண்ணா காலனி முத்துசாமி குளத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணம் மிதந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மிதந்த வாலிபரின் உடலை பார்த்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் குளத்தில் இருந்து வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், குளத்தில் மூழ்கி இறந்தவர் வேடப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நெசவு தொழிலாளியான பிரபு (வயது 31) என்பது தெரியவந்தது. அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story