‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கிறவர்களுக்கு இருக்கை வசதி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கிறவர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் தரையில் உட்கார வேண்டிய நிலை இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தனிமனித இடைவெளியை பின்பற்ற இந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்ததாக தெரியவந்தது. டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். இது மனித நேயமற்ற செயல் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றிய செய்தி நமது ‘தினத்தந்தி’யில் வெளி வந்தது. அதைத்தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இருக்கை வசதி ஏற்படுத்தி உள்ளனர். ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் இடைவெளி விட்டு உட்காரும் வகையில் அந்த இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.
உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story