தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லைகளில் அதிகாரிகள் ஆய்வு
தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லைகளில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
தாளவாடி
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே மற்ற மாநிலங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே போல் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதி தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. மாநில எல்லையில் உள்ள கர்நாடகா சாம்ராஜ்நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி பகுதிக்கு இ-பாஸ் இல்லாமல் ஏராளமானோர் வந்து செல்வதால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி தாசில்தார் உமாமகேஷ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரவடிவேலு தலைமையில் அதிகாரிகள் தமிழக-கர்நாடக எல்லையான பாரதிபுரம், ராமாபுரம், பிசில்வாடி அருள்வாடி, கும்பாரகுண்டி, எத்திகட்டை, கும்டாபுரம் ஆகிய எல்லைகளில் உள்ள சாலையில் ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் தடுப்புகள், சோதனை சாவடிகள் அமைத்து போக்குவரத்துக்கு தடைசெய்ய அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.
Related Tags :
Next Story