தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு தொழிலாளர்கள் ஏற்றி வந்த ஜீப்களை திருப்பி அனுப்பிய போலீசார்


தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு தொழிலாளர்கள் ஏற்றி வந்த ஜீப்களை திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 30 April 2021 4:13 PM IST (Updated: 30 April 2021 4:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு தொழிலாளர்கள் ஏற்றி வந்த ஜீப்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.


கம்பம்:
கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன், தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் கொரோனா பரவலை தடுக்க எல்லைப்பகுதியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும், தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்குள் நுழையும் ஜீப்களில் டிரைவர் உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்,, 5 பேருக்கு மேல் ஏற்றிவரும் ஜீப்கள் கேரளாவுக்குள் செல்ல அனுமதியில்லை என்று முடிவு செய்யப்பட்டது. 
இதைத்தொடர்ந்து நேற்று கம்பம்மெட்டு மலை அடிவாரப்பகுதியான புறவழிச்சாலையில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைமையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதற்காக ஆண், பெண் தொழிலாளர்கள் ஜீப்களில் வந்தனர். அந்த ஜீப்களில் 12-க்கும் மேலானவர்கள் பயணம் செய்தனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தேனி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி டிரைவர் உள்பட 5 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் 200-க்கும் மேலான ஜீப்கள் கேரளாவுக்குள் செல்லாமல் திரும்பி சென்றன.


Next Story