மெஞ்ஞானபுரத்தில் முன்களப்பணியாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
மெஞ்ஞானபுரத்தில், முன்களப்பணியாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
மெஞ்ஞானபுரம்:
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி மற்றும் உடல் நல ஆரோக்கியம் குறித்து முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கினார். கொரோனா முன்களப் பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. மேலும், சுகாதாரமாக, பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்வது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் மருத்துவர் பரத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி, மருந்தாளுனர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story