போடியில் ஏலக்காய் விலை வீழ்ச்சி கிலோவுக்கு ரூ.200 குறைந்தது


போடியில்  ஏலக்காய் விலை வீழ்ச்சி   கிலோவுக்கு ரூ.200 குறைந்தது
x
தினத்தந்தி 30 April 2021 6:57 PM IST (Updated: 30 April 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

போடியில் ஏலக்காய் விலை கிலோவுக்கு ரூ.200 குறைந்து வீழ்ச்சி அடைந்தது.

போடி:
போடியில் முந்தல் சாலையில் ஏலக்காய் நறுமண பொருட்கள் வாரியம் உள்ளது. இங்கு இ.மெயில் மூலம் ஏலக்காய் ஏலம் நடக்கிறது. இங்கு நேற்று ஒரு லட்சம் கிலோ ஏலக்காய்களை விற்பனைக்கு பதிவு செய்து இருந்தனர்.
இந்த ஏலக்காய் ஏலத்தில் போடி, தேவாரம், கம்பம், உத்தமபாளையம், விருதுநகர், டெல்லி, மும்பை, நாக்பூர் மற்றும் கேரளா மாநிலம் குமுளி, கட்டப்பனை, வண்டன்மேடு, மூணாறு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் ஒரு கிலோ உயர்ரக ஏலக்காய் ரூ.1200-க்கும், நடுத்தர ஏலக்காய் ரூ.900-க்கும் விற்பனையானது. சென்ற வாரம் நடந்த ஏலத்தில் உயர்ரக ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1400-க்கும், நடுத்தர ஏலக்காய் ரூ.1100-க்கும் விற்பனையானது, இவ்வாறு நேற்று நடந்த ஏலத்தில் ஏலக்காய் ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து உள்ளது. இதனால் ஏலக்காய் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்..
வடஇந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, நாக்பூர் போன்ற நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள ஏலக்காய் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து விட்டு வீட்டில் பாதுகாப்பாக உள்ளனர். இதனால் ஏலக்காய் விற்பனை வடஇந்தியாவில் அடியோடு குறைந்து உள்ளது. இதுபோன்ற பல காரணத்தால் ஏலக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். 


Next Story