போலீஸ் சோதனைச்சாவடி


போலீஸ் சோதனைச்சாவடி
x
தினத்தந்தி 30 April 2021 9:10 PM IST (Updated: 30 April 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் போலீஸ் சோதனை சாவடியை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திறந்து வைத்தார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் போலீஸ் சோதனைச்சாவடிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. 

இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமை தாங்கினார். 

நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் வரவேற்றார்.

 திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி புதிய சோதனை சாவடியை திறந்து வைத்தார். 

சோதனை சாவடி அமைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட தலைமை காவலர் வீரராகவனுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

விழாவில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் குமரன், விருவீடு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்

Next Story