டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட்டு


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
x

வேடசந்தூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை மர்ம நபர் திருடி சென்றார்.

திண்டுக்கல்: 

 டாஸ்மாக் கடையில் திருட்டு 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கரூர் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. 

இந்த கடையில் கடந்த 28-ந்தேதி தேதி இரவு விற்பனை முடிந்தவுடன் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். 

பின்னர் நேற்று முன்தினம் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் 3 பூட்டுக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. 

இதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். 

பின்பு போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.6 ஆயிரம், 12 குவாட்டர் மதுபாட்டில்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. 

ரூ.2¼ லட்சம் தப்பியது 
மேலும் விற்பனையான பணம் வைத்திருந்த லாக்கரின் பூட்டை மர்ம நபர் உடைக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் உடைக்க முடியவில்லை. 

இதனால் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் தப்பியது. 

மேலும் கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது சம்பவத்தன்று இரவு 11.40 மணியளவில் முக கவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வருவதும், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் மகாமுனி போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story