வாணியம்பாடியில் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் போலீசார் வழங்கினர்.
வாணியம்பாடியில் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் போலீசார் வழங்கினர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி நியூடவுன், பஸ் நிலையம், ெரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் இலவசமாக முகக் கவசங்களை வழங்கி, தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் என்றும், வெளியில் வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story