வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 467 பேருக்கு கொரோனா தொற்று
வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 467 பேருக்கு கொரோனா தொற்று
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் மக்களிடையே பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர தனியார் நிறுவனங்களிலும் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பிப்ரவரி மாத இறுதியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது பல மடங்கு அதிகரித்து வருகிறது. 400-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கி விட்டது. வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் மாநகராட்சி பகுதிகளான 1-வது மண்டலத்தில் 97 பேருக்கும், 2-வது மண்டலத்தில் 67 பேருக்கும், 3-வது மண்டலத்தில் 60 பேருக்கும், 4-வது மண்டலத்தில் 35 பேருக்கும் என மொத்தம் 259 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 467 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிற சிகிச்சைக்காக வரும் வெளிமாநில நபர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
Related Tags :
Next Story