4 வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி மூலம் தொகுதி ஒதுக்கீடு
4 வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு கணினி மூலம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கலெக்டர், தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4 மையங்களில் நடக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கையை சட்டமன்ற தொகுதி வாரியாக கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அதன்படி திட்டக்குடி பார்வையாளராக லாவண்ணா, விருத்தாசலம் தொகுதிக்கு மகேஷ்வர் அகஸ்தி, நெய்வேலி தொகுதிக்கு முரளி கிருஷ்ணா, பண்ருட்டி தொகுதிக்கு ஜெயந்த நாராயண் சாரங்கி, கடலூர் தொகுதிக்கு குமுதினிசிங், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு ஸ்ரீநிவாசலு, புவனகிரி தொகுதிக்கு பார்வையாளர் ராஜேஷ்குமார் ஓக்ரே, சிதம்பரம் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் ரகுமணி ஜமாங்கோ, காட்டுமன்னார் கோவில் தொகுதிக்கு வர்ஷா உந்த்வல் லத்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி ஒதுக்கீடு
இந்நிலையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணும் பணிக்காக 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 நுண் பார்வையாளர்கள் என 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 153 கண்காணிப்பாளர்கள், 153 உதவியாளர்கள், 153 நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு கணிணி மூலம் பணி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேற்று அவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் கணினி மூலம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மகேஷ்வர் அகஸ்தி, ஜெயந்த நாராயண்சாரங்கி, குமுதினிசிங், ராஜேஷ்குமார் ஓக்ரே, ரகுமணி ஜமாங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story