கொரோனா காரணமாக அடைக்கப்பட்ட பகுதியில் விழிப்புணர்வு இல்லாமல் செல்லும் பொதுமக்கள் கண்காணித்து தடுக்க கோரிக்கை


கொரோனா காரணமாக அடைக்கப்பட்ட பகுதியில் விழிப்புணர்வு இல்லாமல் செல்லும் பொதுமக்கள் கண்காணித்து தடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 April 2021 10:08 PM IST (Updated: 30 April 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க அடைக்கப்பட்ட பகுதியில் விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் செல்கின்றனர். எனவே அதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இடிகரை,

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பூச்சியூர் செல்லும் வழியில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மேலும் அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், தடுக்கும் வகையிலும் நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த சாலையில் இரும்பு தகடு வைத்து அடைத்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது.

இந்த பகுதியில் ஒருவர் உயிரிழந்ததால், தொற்றுள்ள பகுதியாக அடைக்கப்பட்டு உள்ளது. பூச்சியூரில் இருந்து வருபவர்கள் ஜோதி காலனி வழியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் இன்று காலை பூச்சியூர் பகுதியில் இருந்து வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வரும்போது, இந்த சாலை அடைக்கப்பட்டு இருந்ததால் அடைக்கப்பட்டதிற்கு அருகிலுள்ள சந்து வழியாகவே பொதுமக்கள் சென்று வந்தனர்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் எச்சரித்தும் அவர்கள் அந்த வழியாகவே வந்து சென்றது கொரோனா குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை என்பது தெரிகிறது. ஆகவே கொரோனா தொற்று பரவலை தடுக்க அடைக்கப் பட்ட பகுதியில் சென்று வருபவர்களை கண்காணித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Next Story