பாப்பாரப்பட்டி அருகே வைக்கோல் போரில் எரிந்த நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
பாப்பாரப்பட்டி அருகே வைக்கோல் போரில் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே வைக்கோல் போரில் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் பிணம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. (வயது 37). கடந்த 28-ந் தேதி நள்ளிரவு முருகன் வீட்டுக்கு பின்புறம் இருந்த வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்ததாக அக்கம் பக்கத்தினர் சென்று தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை எரிந்துபோன வைக்கோல் போரில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து வைக்கோல் போரில் சாம்பலில் எரிந்த நிலையில் ஒரு பெண் பிணம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எரிந்த நிலையில் இருந்தது லட்சுமியின் பிணம் என்று தெரியவந்தது.
கொலையா?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்ராமன், தொல்காப்பியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் லட்சுமியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி கொலை செய்யப்பட்டு வைக்கோல் போரில் தீ வைத்து எரிக்கப்பட்டாரா? அல்லது உயிருடன் வைத்து எரித்துக் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story