தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது


தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 10:16 PM IST (Updated: 30 April 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சாத்தப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ரவிச்சந்திரன்(வயது 29). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் சாமிதுரை(34) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் சாமிதுரையின் மாடு ரவிச்சந்திரனின் நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கி, மிரட்டினர். இதில் ரவிச்சந்திரன், இவரது அண்ணன் துரை(34), மற்றும் நாராயணன்(70), இவரது மகன் சாமிதுரை(34) ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன், சாமிதுரை ஆகியோர் மீதும், சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் துரை, ரவிச்சந்திரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.



Next Story