5 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர்,
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.10-ம் திருநாளன்று நடைபெறும் மஞ்சுவிரட்டை நடத்த அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினர் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கண்டரமாணிக்கம் அருகே வெளியாத்தூர் கண்மாய் மற்றும் வயல் பகுதியில் நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு காளைகளை ஆங்காங்கே கட்டுமாடுகளாக மாட்டின் உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர். இதை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர்.
இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வெளியாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், அரசு உத்தரவை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கண்டரமாணிக்கத்தைச்சேர்ந்த சுரேஷ் கருப்பையா (வயது 47), பிரகாஷ் (43), சுதாகர் (41), முருகன் (50), மனோகரன் (58) ஆகிய 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story