கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிப்ளமோ என்ஜினீயரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிப்ளமோ என்ஜினீயரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம்
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் கலியமூர்த்தி (வயது21). டிப்ளமோ என்ஜினீயர். இவர் 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதிக்கு கடத்தி சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
டிப்ளமோ என்ஜினீயர் கைது
இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாதேவன் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story