அம்பையில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் ஆய்வு


அம்பையில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 1 May 2021 12:20 AM IST (Updated: 1 May 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.

அம்பை, மே:
அம்பை நகராட்சி பகுதிகளில் கொரனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுல்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் நகராட்சி 12, 13-வது வார்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பார்கவி, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் நகராட்சி சார்பில் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Next Story