மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற பெல் அதிகாரி லாரி மோதி சாவு + "||" + Retired Bhel Officer Larry Moti died tragically.

ஓய்வு பெற்ற பெல் அதிகாரி லாரி மோதி சாவு

ஓய்வு பெற்ற பெல் அதிகாரி லாரி மோதி சாவு
ஓய்வு பெற்ற பெல் அதிகாரி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெறும்பூர், மே.1-
திருவெறும்பூர் அருகே உள்ள வின்நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார் (வயது 61). இவர் பெல் நிறுவனத்தில் டி.ஜி.எம். ஆக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் நேற்று மதியம் பெல் நிறுவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திருவெறும்பூர் ரெயில்வே மேம்பாலத்தில் வந்த போது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார், அந்த லாரியை பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் மடக்கிப்பிடித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.