கர்நாடகத்தில் புதிய உச்சமாக 48,296 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிய உச்சமாக 48,296 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 April 2021 7:37 PM GMT (Updated: 30 April 2021 7:37 PM GMT)

கர்நாடகத்தில் புதிய உச்சமாக 48,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிய உச்சமாக 48,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மீண்டவர்களின் எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 89 ஆயிரத்து 793 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 48,296 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 23 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14,884 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 24 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 82 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ளது. 

217 பேர் உயிரிழந்தனர்

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 26,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 234 பேர், பல்லாரியில் 1,282 பேர், பெலகாவியில் 514 பேர், பெங்களூரு புறநகரில் 818 பேர், பீதரில் 447 பேர், சாம்ராஜ்நகரில் 474 பேர், சிக்பள்ளாப்பூரில் 579 பேர், சிக்கமகளூருவில் 542 பேர், சித்ரதுர்காவில் 144 பேர், தட்சிண கன்னடாவில் 1,205 பேர், தாவணகெரேயில் 438 பேர், தார்வாரில் 703 பேர், கதக்கில் 122 பேர், ஹாசனில் 709 பேர், ஹாவேரியில் 90 பேர், கலபுரகியில் 1.256 பேர், குடகில் 609 பேர், கோலாரில் 845 பேர், கொப்பலில் 256 பேர், மண்டியாவில் 1,348 பேர், மைசூருவில் 3,500 பேர், ராய்ச்சூரில் 713 பேர், ராமநகரில் 286 பேர், சிவமொக்காவில் 673 பேர், துமகூருவில் 1,801 பேர், உடுப்பியில் 660 பேர், உத்தரகன்னடாவில் 426 பேர், விஜயாப்புராவில் 521 பேர், யாதகிரியில் 325 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 93 பேரும், ஹாசனில் 19 பேரும், மைசூருவில் 13 பேரும், பல்லாரியில் 11 பேரும், தார்வாரில் 7 பேரும், பீதர், சாம்ராஜ்நகர், தாவணகெரே, கலபுரகி, சிவமொக்கா, துமகூருவில் தலா 6 பேரும், குடகு, மண்டியா, ராமநகர், உத்தரகன்னடாவில் தலா 5 பேரும், பாகல்கோட்டை, கோலார், விஜயாப்புராவில் தலா 3 பேரும் உள்பட மொத்தம் 217 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

40 சதவீதம் அதிகரிப்பு

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக பதிவாகி இருந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே நாள் இடைவெளியில் பாதிப்பு சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் கர்நாடக அரசும், மாநில மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மாநிலத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின் பலன், அடுத்த ஒரு வாரத்திற்கு பிறகு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இந்த வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மராட்டியத்தை அடுத்து கர்நாடகத்தில் கொரோனா தனது கோர முகத்தை வெளிப்படுத்தி வருகிறது.

Next Story