சாக்குப்பையில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு


சாக்குப்பையில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 May 2021 1:28 AM IST (Updated: 1 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

சாக்குப்பையில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு

திருப்பரங்குன்றம்
மதுரை திருநகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள குமாரசாமி தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார்(வயது 39) ஆடிட்டர். இவரது வீட்டின் பின்புறம் காலி இடத்தில் ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது.  அதை பார்த்த செந்தில்குமார் சாக்குப்பையை எடுத்து பிரித்து பார்த்துள்ளார். அப்போது அதனுள் சுமார் 3 அடி நீளமுள்ள துப்பாக்கி (ஏர்கன்) இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் திருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் விரைந்து சென்று துப்பாக்கியை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து சாக்குப் பைக்குள் துப்பாக்கியை வைத்து வீசி சென்றது யார்? யாருடைய துப்பாக்கி? வீசியதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story