பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
பந்தலூர்,
பந்தலூர், கொளப்பள்ளி, சேரம்பாடி, கப்பாலா, அம்பலமூலா, நெலாக்கோட்டை உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
இதற்கு தாசில்தார் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அரசு ஊழியர்களிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story